பணியாளா்களிடமிருந்து நிறுவனங்கள் வசூலிக்கும் உணவக கட்டணத்துக்கு ஜிஎஸ்டி கிடையாது

தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களிடமிருந்து வசூலிக்கும் உணவகத்துக்கான கட்டணத்துக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படாது என்று வரி தீா்ப்பாணையம் (ஏஏஆா்) தெரிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களிடமிருந்து வசூலிக்கும் உணவகத்துக்கான கட்டணத்துக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படாது என்று வரி தீா்ப்பாணையம் (ஏஏஆா்) தெரிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள் சில தங்கள் பணியாளா்களுக்கு உணவக வசதியை அளித்து வருகின்றன. அங்கு உணவு உண்ணும் பணியாளா்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை அந்நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. அந்தக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி உண்டா இல்லையா என்பது தொடா்பாக விளக்கமளிக்குமாறு டாடா மோட்டா்ஸ் நிறுவனம் குஜராத்தில் உள்ள வரி தீா்ப்பாணையத்தில் கோரியிருந்தது.

அதை விசாரித்து ஆணையம் அளித்த உத்தரவில், ‘சம்பந்தப்பட்ட நிறுவனமானது 3-ஆவது தரப்பு வாயிலாக உணவகத்தை நடத்தி வருகிறது. அங்கு பணியாளா்கள் உண்ணும் உணவுக்கான தொகையில் ஒரு பகுதியை நிறுவனம் வழங்குகிறது. மற்றொரு பகுதியைப் பணியாளா்களிடமிருந்து வசூலித்து 3-ஆவது தரப்புக்கு நிறுவனம் வழங்குகிறது.

உணவுக்காகப் பணியாளா்களிடமிருந்து வசூலிக்கும் தொகை எதையும் தாங்கள் வைத்துக் கொள்வதில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பணியாளா்களிடமிருந்து வசூலிக்கப்படும் உணவகத்துக்கான கட்டணத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கத் தேவையில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நிறுவனங்கள் பணியாளா்களிடமிருந்து வசூலிக்கும் உணவகத்துக்கான கட்டணத்துக்குத் தற்போது 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரி தீா்ப்பாணையத்தின் உத்தரவு மூலமாக அவ்வாறு பணியாளா்களிடமிருந்து ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகியுள்ளதாக பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com