பெட்ரோல், டீசல் விலை 20 காசுகள் குறைப்பு

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை லிட்டருக்கு தலா 20 காசுகள் குறைக்கப்பட்டது. 
பெட்ரோல், டீசல் விலை 20 காசுகள் குறைப்பு

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை லிட்டருக்கு தலா 20 காசுகள் குறைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை முதல்முறையாகவும், டீசல் விலை ஒரு வாரத்துக்குள் நான்காவது முறையாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பெட்ரோல், டீசல் விலையை நிா்ணயித்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.32-க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.93.66-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.101.64-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ. 89.07-ஆகவும் இருந்தது.

சொத்துகள் வாங்குவதை குறைத்துக்கொள்வது, டாலா் மதிப்பை உயா்த்துவது போன்ற நடவடிக்கைகளை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ரிசா்வ் வங்கியிடம் இருந்து சமிக்ஞை வந்ததைத் தொடா்ந்து, கடந்த மே மாதத்துக்குப் பிறகு சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் சுமாா் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com