ஆப்கன் விவகாரம்: மோடி - புதின் தொலைபேசியில் ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் நேட்டோ படைகள் ஆப்கனைவிட்டு வெளியேறியதையடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

இதையடுத்து, ஆப்கனில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. விமானப் படைகளின் விமானங்கள் மூலம் தங்கள் நாட்டினரை தாயகம் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கனில் நிலவும் சூழல் குறித்து ரஷிய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இன்று 45 நிமிடங்கள் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி கூறியது:

“ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலை குறித்து ரஷிய அதிபரும் எனது நண்பருமான புதினுடன் விரிவான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கரோனாவுக்கு எதிரான இந்தியா - ரஷியாவுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம்”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com