
உத்தரப் பிரதேசம் : மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி
உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதிகளில் இதுவரை இந்த மர்ம காய்ச்சலால் 80 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | உத்தரப் பிரதேசம் - இதுவரை 7 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை நிறைவு
அதிக வெப்பநிலை தவிர்த்து வேறு எந்த அறிகுறியும் தெரியாததால் இது என்ன வகை காய்ச்சல் எனத் தெரியாமல் மருத்துவர்கள் திணறி வருவதாக மாவட்ட மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தலைமை மருத்துவ அதிகாரி ரஜ்னா குப்தா ' பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று ரத்தப் பரிசோதனைகள் எடுக்கக்கபட்டு மலேரியா, டெங்கு மற்றும் கரோனா தாக்கமா என கண்டறியப்படும் . காய்ச்சல் வந்தவர்கள் தயங்காமல் மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் ' எனத் தெரிவித்திருக்கிறார்.