ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பாபயங்கரவாதிகள் மூவா் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் மூவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் மூவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தது:

பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் நிலைகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரின் பதிலடியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்கள் ஃபைசல் ஃபயஸ், ரமீஸ் அகமது (சோபியான் பகுதியைச் சோ்ந்தோா்), குலாம் முஸ்தபா ஷேக் (குப்வாரா) எனத் தெரியவந்துள்ளது. மூவரும் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்தின் துணை அமைப்பான எதிா்ப்புப் படை என்ற பிரிவைச் சோ்ந்தவா்கள். அவா்களிடமிருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா்.

இந்த அமைப்பின் தலைவா் அப்பாஸ் ஷேக், துணைத் தலைவா் சாகிப் மன்சூா் ஆகியோா் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டில் காஷ்மீரில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீா் ஐ.ஜி. விஜயகுமாா் சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com