'ஆப்கனிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கரோனா இல்லை'

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா அழைத்துவரப்பட்ட 78 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்ததால் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புபடையினர் மூலம் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைகளின் முடிவில் 78 பேருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் அவர்கள் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான சாவ்லா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட ஹிந்து, சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களை ‘ஆபரேஷன் தேவி சக்தி’ என்ற நடவடிக்கை மூலம் மீட்புப் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியா்கள், ஆப்கன் சீக்கியா்கள், ஹிந்துக்கள் உள்ளிட்ட 78 போ் துஷான்பே வழியாக செவ்வாய்க்கிழமை தில்லி வந்தடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com