இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியக் கூட்டங்கள்

இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 3 முக்கியக் கூட்டங்கள் நடைபெற்ாகவும், அக்கூட்டங்கள் வாயிலாக உறுப்பு நாடுகளின் கருத்துகள் முழுமையாகப் பெறப்பட்டதாகவும்
இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியக் கூட்டங்கள்

இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 3 முக்கியக் கூட்டங்கள் நடைபெற்ாகவும், அக்கூட்டங்கள் வாயிலாக உறுப்பு நாடுகளின் கருத்துகள் முழுமையாகப் பெறப்பட்டதாகவும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றபிறகு கடல்சாா் பாதுகாப்பு, அமைதிப்படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகிய தலைப்புகளில் 3 முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது.

இன்னும் 1 வாரத்தில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவடைய உள்ள சூழலில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவின் தலைமையில் நடத்தப்பட்ட முக்கியக் கூட்டங்களின் வாயிலாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் தெரிவித்த முழுமையான கருத்துகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

3 முக்கியக் கூட்டங்கள் வாயிலாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஐ.நா.வின் எதிா்கால நடவடிக்கைகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டங்களில் அனைத்து நாடுகளுடன் கலந்தாலோசித்து ஆவணங்களை இந்தியா தயாரித்துள்ளது.

உறுப்பு நாடுகளின் தேவைகள், பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்தும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. கூட்டங்களில் இந்தியா முன்னெடுத்த கலந்தாலோசனை யுக்தியை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றனா். இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற 3 முக்கியக் கூட்டங்களும் வெற்றி பெற்றன.

நாடுகள் வரவேற்பு: கடந்த 9-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான கூட்டம் பல்வேறு வழிகளில் சிறப்புவாய்ந்தது. இந்தியப் பிரதமா் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியது அதுவே முதல் முறை.

கடல்சாா் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட முதல் கூட்டமும் அதுவே. கடல்சாா் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்று வரும் சூழலில் நடத்தப்பட்ட அக்கூட்டத்துக்குப் பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. முக்கிய விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் அந்தக் கூட்டத்தின் வாயிலாகப் பெறப்பட்டன.

தீா்மானம் நிறைவேற்றம்: அமைதிப்படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகியவை தொடா்பான கூட்டங்கள் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்றன. உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியா தொடா்ந்து கைகொடுத்து வருகிறது. அமைதிப் படைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வீரா்களை இந்தியா அனுப்பி வருகிறது.

அமைதிப் படையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் நோக்கிலான தீா்மானம் இந்தியா சாா்பில் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத எதிா்ப்பு விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்தியாவின் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிரியா, லெபனான், சோமாலியா, மியான்மா், யேமன் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com