ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை முடிக்கும் பிரிட்டன்

ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 85 போ் கொல்லப்பட்டனா். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதக் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "பிரிட்டனுக்கு அழைத்துவரப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் அளிக்கப்படும். கிட்டத்தட்ட 1,000 பேர் விமான நிலைத்தில் உள்ளனர். 

கூட்டத்தில் இருப்பவர்களில் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க வழி வகுக்கப்படும். ஆனால், ஒட்டு மொத்த மீட்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒரி சில மணி நேரமே மிச்சமுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com