கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வில் அதிர்ச்சி

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, கரோனா அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஓராண்டுக்கும் மேல் நீடிப்பதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வில் அதிர்ச்சி
கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வில் அதிர்ச்சி


பெய்ஜிங்: கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, கரோனா அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஓராண்டுக்கும் மேல் நீடிப்பதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுக் கட்டுரை தி லான்செட் இதழில் வெளியாகியுள்ளது.

சீனத்தின் வூஹான் மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதித்தவர்களிடம் நடத்திய ஆய்வில், மூன்றில் ஒருவருக்கு கரோனா பாதித்து 12 மாதங்களுக்குப் பிறகும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் நீடிப்பதாகவும், குறிப்பாக கடுமையான பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் இது அதிகமாகக் காணப்படுவது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்ல, கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டு வந்தவர்கள், கரோனா பாதிக்காதவர்களை விடவும் சற்று ஆரோக்கியக் குறைவுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்களின் 12 மாதக் காலத்துக்குப் பிந்தைய ஆரோக்கியம் குறித்து மிகப்பெரிய ஆய்வு நடத்தப்படுவதாக, சீனா - ஜப்பான் நட்பு மருத்துவமனையின் பேராசிரியர் பின் காவோ கூறியுள்ளார்.

மேலும், சிலர் மிக விரைவாக குணமடைந்துள்ளது, சில நோயாளிகளுக்கு உடல்நலப் பிரச்னைகள் நீடிக்கின்றன, அதிலும் குறிப்பாக கடுமையான பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு என்று காவோ கூறுகிறார்.

இந்த ஆய்வில் கிடைத்த சில தகவல்களில், சில நோயாளிகளுக்கு, கரோனா பாதிப்பிலிருந்து மீள ஓராண்டுக்கும் மேல் ஆனதும் தெரிய வந்துள்ளது.

இதே குழுவினர் கடந்த முறை நடத்திய ஆய்வில், கரோனா நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்கும் மேல் ஏதேனும் ஒரு அறிகுறி இருப்பதாகக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 2020 ஜனவரி 7 முதல் மே 29ஆம் தேதி வரை மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பிய நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 6 மற்றும் 12 மாதங்களில், நோயாளிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கரோனா அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று நீடிக்கிறதா என்பது குறித்தும், ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்கிறார்களா என்பது குறித்தும் சோதிக்கப்பட்டது.

அதில், பெரும்பாலான கரோனா அறிகுறிகள், நோய் பாதிப்பிலிருந்து மீண்டதுமே சரியாகிவிடுவதாகக் கூறியுள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர், ஏதேனும் ஒரு அறிகுறி மட்டும் ஓராண்டுக்கும் மேல் நீடிப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்களில் 68 சதவீதம் பேருக்கு ஏதேனும் ஒரு அறிகுறி 6 மாத காலத்துக்கும், 49 சதவீதம் பேருக்கு 12 மாதங்களுக்கும் நீடிப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, நடுக்கம் மற்றும் உடல்தசை தளர்ச்சி போன்றவை பெரும்பாலானோருக்கு நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com