ஆப்கனிலிருந்து 6 விமானங்களில் 550 பேர் மீட்பு
ஆப்கனிலிருந்து 6 விமானங்களில் 550 பேர் மீட்பு

ஆப்கனிலிருந்து 6 விமானங்களில் 550 பேர் மீட்பு: வெளியுறவுத் துறை

ஆப்கானிஸ்தானிலிருந்து 6 தனி விமானங்களில் 550 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து 6 தனி விமானங்களில் 550 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து கடந்த 10 நாள்களாக தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி கூறியது:

“காபூல் அல்லது துஷன்பேவிலிருந்து 6 தனி விமானங்களில் 550 பேர் வெளியேற்றியுள்ளோம். இதில் 260-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். மேலும், இந்திய நிறுவனங்கள் மூலமும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா, தஜிகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.

இந்தியாவிற்கு திரும்ப நினைத்த பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நாடு திரும்ப விரும்பும் சிலர் ஆப்கனில் இருக்க வாய்ப்புள்ளது. மீட்புப் பணிகளின் போது சில ஆப்கன் நாட்டினரையும் மீட்டுள்ளோம். அதில், பெரும்பாலானவர்கள் ஹிந்து மற்றும் சீக்கிய மதத்தவர்கள் ஆவர்.

ஆப்கனின் தற்போதைய நிலை என்பது நிச்சயமற்றது. முதலில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். காபூலில் அரசாங்கம் அமைப்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

நாங்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம்.

ஆப்கனிலிருந்து வந்த கடைசி விமானத்தில் 40 பேர் பயணித்தினர். ஆப்கனை சேர்ந்த சிலர் அந்த விமானத்தில் வருவதாக இருந்தது. ஆனால், விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் வராததால், அவர்களின்றி விமானம் புறப்பட்டது. 

நாங்கள் அமைதியான, வளமான, ஜனநாயக ஆப்கானிஸ்தானை விரும்புகிறோம். தற்போதைக்கு ஆப்கனில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com