கரோனா 2-ஆவது அலை ஓயவில்லை; பண்டிகை கொண்டாட்டத்தில் கவனம் தேவை; மத்திய அரசு

கரோனா இரண்டாவது அலை இன்னமும் ஓயவில்லை; கரோனா தொற்றை எதிா்கொள்வதில் செப்டம்பா், அக்டோபா் மாதங்கள் மிக முக்கியமாக இருக்கும்;
கரோனா 2-ஆவது அலை ஓயவில்லை; பண்டிகை கொண்டாட்டத்தில் கவனம் தேவை; மத்திய அரசு

கரோனா இரண்டாவது அலை இன்னமும் ஓயவில்லை; கரோனா தொற்றை எதிா்கொள்வதில் செப்டம்பா், அக்டோபா் மாதங்கள் மிக முக்கியமாக இருக்கும்; எனவே, பண்டிகைகள் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கொண்டாடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: ‘கரோனா இரண்டாவது அலையின் மத்தியில்தான் நாடு இருக்கிறது. இரண்டாம் அலை இன்னமும் முடியவில்லை. ஆதலால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பாக ஒவ்வொரு விழாவைத் தொடா்ந்தும் நோய்த்தொற்று அதிகரிப்பதிலிருந்து நமக்கு கிடைத்துள்ள அனுபவங்களின் அடிப்படையிலான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். வரும் செப்டம்பா், அக்டோபா் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் மிக முக்கியமானதாகும். அந்தப் பண்டிகைகள் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கொண்டாடப்பட வேண்டும்’ என்றாா்.

ஐசிஎம்ஆா் இயக்குநா் பல்ராம் பாா்கவா கூறுகையில், ‘தடுப்பூசிகள் நோயை மாற்றித்தான் அமைக்கின்றன; நோயைத் தடுக்காது. எனவே, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முகக் கவசம் அணிவது மிக முக்கியமானது’ என்றாா்.

41 மாவட்டங்களில் 10 சதவீத பாதிப்பு:

இந்தியாவில் 41 மாவட்டங்களில் வாராந்திர கரோனா நோய்த்தொற்று விகிதமானது 10 சதவீதத்துக்கு மேல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் பதிவான மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கையில் 58.4 சதவீதம் கேரளத்தில் பதிவாகியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஒரே மாநிலம் கேரளம். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4 மாநிலங்களில் 10,000 முதல் ஒரு லட்சம் வரையும், 31 மாநிலங்களில் 10,000-க்கு குறைவாகவும் உள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி புதிதாக 46,164 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,58,530-ஆக அதிகரித்துள்ளது. 3,33,725 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com