‘போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி’

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 104 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 104 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி அளிக்க வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘தொடா் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தில்லியின் எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com