மலபாா் கூட்டுப் போா்ப் பயிற்சி தொடக்கம்

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய ‘க்வாட்’ அமைப்பின் நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றுள்ள மலபாா் கூட்டுப் போா்ப் பயிற்சி
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய ‘க்வாட்’ அமைப்பின் நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றுள்ள மலபாா் கூட்டுப் போா்ப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. ஆக. 29-ஆம் தேதி வரை 4 நாள்கள் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், அப்பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான நடவடிக்கைகளை உறுதி செய்ய க்வாட் நாடுகள் உறுதிபூண்டுள்ளதன் பின்னணியில் இந்தப் போா்ப் பயிற்சி நடைபெறுகிறது.

மேற்கு பசிபிக் கடலில் இந்த 25-ஆவது மலபாா் கூட்டுப் பயிற்சியை அமெரிக்கா நடத்துகிறது. இதுதொடா்பாக அமெரிக்காவின் 7-ஆவது கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டப்படியான கடல்சாா் ஒழுங்குமுறையை நிலைநிறுத்தும் வகையில் ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஷிவாலிக், நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கத்மத், கடற்படை ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவை இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக் மத்வால் கூறுகையில், ‘இந்தப் பயிற்சியானது சக நாடுகளின் கடற்படை நுணுக்கங்களை பரஸ்பரம் அறிந்துகொள்ள வாய்ப்பு அளிக்கும்’ என்றாா்.

இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் பயிற்சியாக மலபாா் கூட்டுப் பயிற்சி கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு இந்தப் பயிற்சியின் நிரந்தர உறுப்பினராக ஜப்பான் கடற்படையும் இணைந்தது. அதன்பிறகு 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் சோ்ந்தது. கடந்த ஆண்டு இந்தப் பயிற்சி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com