மேற்கு வங்க வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பியோடியதாகக் காவல் துறையில் பதிவு: சிபிஐ

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்றதாகக் கூறப்பட்டு வரும் வன்முறை தொடர்பாக மாநில காவல் துறையிடமிருந்து சிபிஐ 60 வழக்குகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிபிஐ இணை இயக்குநர் தலைமையில் விசாரிக்க சிபிஐ 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 109 அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சிபிஐ 11 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அனைத்தும் தெற்குப் பகுதி மாவட்டங்கள்.

இந்த நிலையில் சிபிஐ அதிகாரி ஒருவர் விசாரணை குறித்து தெரிவித்தது,

"17 மாவட்டங்களிலிருந்து 60 வழக்குகள் பெறப்பட்டன. மாநில காவல் துறை நடத்திய விசாரணையின் விவரங்கள், பெரும்பாலான வழக்குகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தப்பியோடிவிட்டதாகக் கூறுகிறது. ஒவ்வொரு வழக்குகளையும் கூர்மையாக ஆய்வு செய்து வருகிறோம்.

காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம்."
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com