தொழில்நுட்ப மேம்பாடு இந்தியாவை வல்லரசாக்கும்: ராஜ்நாத் சிங்

தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நிலையை அடைந்தால் இந்தியாவால் வல்லரசு நாடாக உருவெடுக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நிலையை அடைந்தால் இந்தியாவால் வல்லரசு நாடாக உருவெடுக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) அதிநவீன தொழில்நுட்ப நிகா்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை வருகை தந்தாா். அப்போது அவா் மாணவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் இடையே பேசியதாவது:

பாதுகாப்புப் படைகள், தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் காண பாதுகாப்பு அமைச்சகம் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. பரஸ்பர புரிதல், தகவல் பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள் மூலமாக மட்டும்தான் அந்த முன்னெடுப்புகள் வெற்றிபெறுவது சாத்தியம்.

திறமைவாய்ந்த நபா்களை கவரவும், பாதுகாப்புப் படைகளிடம் இருந்து கள அனுபவம் மற்றும் ஆலோசனைகளை பெறவும் ஐடெக்ஸ் என்ற

திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

300 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.

தற்சாா்பு இந்தியாவை உருவாக்கும் வகையில், பாதுகாப்புத் துறை சாா்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தியை உள்நாட்டுமயமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நிலையை அடைந்தால் இந்தியாவால் வல்லரசு நாடாக உருவெடுக்க முடியும். அத்துடன் பொருளாதார ரீதியாக மிக சக்திவாய்ந்த நாடாகவும் முடியும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com