ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைகிறதா? நாடாளுமன்றத்தில் தரவுகள் தாக்கல்

ஜம்மு & காஷ்மீரில் 2018-க்கு பிறகு ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர்


ஜம்மு & காஷ்மீரில் 2018-க்கு பிறகு ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

"ஜம்மு & காஷ்மீரில் ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் 2018-க்கு பிறகு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளன.

2018-இல் 143 ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்தன. நிகழாண்டில் நவம்பர் வரை 28 ஊடுருவல் சம்பவங்கள் மட்டுமே அரங்கேறியுள்ளன.

இதேபோல, 2018-இல் மட்டும் 417 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நிகழாண்டில் நவம்பர் வரை மொத்தம் 244 பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன."

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com