
அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் : என்சிஆர்பி
தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2021-நீங்கலாக கடந்த 2018-2020 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 19,909 என தேசிய குற்றப் பதிவுத் துறை(என்சிஆர்பி) அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிக்க | மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: 2 ஆண்டில் 8.30 லட்சம் பேருக்கு சிகிச்சை
இதில் 16,883 தற்கொலைகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தையும் , 14,578 தற்கொலைகளுடன் மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும் இருக்கிறது.
2019-ஆண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் சதவீதம் 9.7-லிருந்து 11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
மேலும் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் 2018-2020 வரை தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதும் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.