பாஜகவுக்கு எதிராக யார் வந்தாலும் வரவேற்கப்படுவார்கள்: மம்தா சந்திப்புக்குப் பிறகு சரத் பவார்

பாஜகவுக்கு எதிராக யார் வந்தாலும், அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனான சந்திப்புக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை தெரிவித்தார்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாஜகவுக்கு எதிராக யார் வந்தாலும், அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனான சந்திப்புக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை தெரிவித்தார்.  

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் மும்பையில் புதன்கிழமை சந்தித்துக்கொண்டனர்.

சந்திப்பு குறித்து சரத் பவார் கூறியது:

"தலைமைக்கு வலிமையான மாற்றை உருவாக்க வேண்டும். நாங்கள் இன்றைய தினத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. தேர்தலை மனதில் கொண்டு சிந்திக்கிறோம். இந்த நோக்கத்தில்தான் மம்தா வந்திருக்கிறார். எங்கள் அனைவருடனும் நேர்மறையான ஆலோசனை நடத்தினார்.

சஞ்சய் ரௌத் மற்றும் ஆதித்ய தாக்கரேவை அவர் சந்தித்தார். இன்று எங்களைச் சந்தித்து விரிவாகப் பேசினார். இன்றைய சூழலில் ஒற்றை சிந்தனை உடையவர்கள் தேசிய அளவில் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்க வேண்டும் என்பது அவரது நோக்கம்.

காங்கிரஸோ அல்லது வேறு ஏதேனும் கட்சியோ, பாஜகவுக்கு எதிராக இருக்கும் யார் வந்தாலும், வரவேற்கப்படுவார்கள்."

இதுபற்றி மம்தா கூறுகையில், "தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிசத்துக்கு எதிராக யாரும் சண்டையிடாமல் இருப்பதால் உறுதியான ஒரு மாற்றை உருவாக்க வேண்டும். சரத் பவார் மிகவும் மூத்த தலைவர். எங்களது அரசியல் கட்சிகள் குறித்துப் பேச இங்கு வந்தேன். சரத் பவார் கூறியதை ஒப்புக்கொள்கிறேன். இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கிடையாது" என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் மும்பை சென்றார். செவ்வாய்க்கிழமை இரவு சிவசேனை தலைவர்கள் சஞ்சய் ரௌத் மற்றும் ஆதித்ய தாக்கரேவை அவர் சந்தித்தார். மத்தியில் உள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே மம்தா பானர்ஜி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com