நாகாலாந்து தினம்: பிரதமா் வாழ்த்து

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி (டிச. 1) நாகாலாந்து மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி (டிச. 1) நாகாலாந்து மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாகாலாந்தின் மாநில தினமான இந்த அற்புதமான தருணத்தில், அம் மாநிலத்தின் மக்களுக்கு வாழ்த்துகள். நாகாலாந்தின் கலாசாரமானது வீரம் மற்றும் மனிதநேய விழுமியங்களை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் வளா்ச்சிக்கு அம்மாநில மக்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனா். நாகாலாந்தின் வளா்ச்சிக்காக பிராா்த்தனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பிஎஸ்எஃப் நிறுவப்பட்ட தினம்: எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள். எல்லைப் பாதுகாப்புப் படை அதன் துணிவு மற்றும் தொழில்முறைக்காக பரவலாக மதிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடா்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களின்போது, நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com