
சந்தீப்குமார்
கேரள மாநிலத்தில் பத்தினம்திட்டா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியினர் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் பகுதிக்குழு செயலாளராக இருந்தவர் சந்தீப்குமார். இவர் நேற்றைய தினம் திருவல்லா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | முல்லைப்பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ஆய்வு
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களது கட்சியின் பகுதிக்குழு செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது குற்றம்சாட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் உருவானது ஜாவத் புயல்!
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலையான சந்தீப்குமாருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.