
பசவராஜ் பொம்மை (கோப்புப் படம்)
ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
ஒமைக்ரான் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் ஆலோசனை நடத்தினேன். இன்று பிற்பகல் 1 மணிக்கு சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். இந்தக் கூட்டத்தில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
நாட்டில் முதல்முறையாக பெங்களூரு வந்த இருவருக்கு ஒமைக்ரான் தொற்று நேற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.