
காஷ்மீர் பனிப்பொழிவை தேசியப் பேரிடராக அறிவிப்பு
காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் பனிக்காலம் துவங்கிய நிலையில் முதல்முறையாக கடந்த நவ.22 ஆம் தேதி தலைநகர் ஸ்ரீநகரில் குளிர் மைனஸ் 1.6 ஆகப் பதிவாகியிருந்தது.
தற்போது கடந்த சில நாடகளாக காஷ்மீரின் பல பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலைப் பதிவாகி வருவதால் ஸ்ரீநகரில் மைன்ஸ் 2.4 ஆகவும் பஹல்ஹாமில் மைனஸ் 4.1 ஆகவும் வெப்பநிலை கடுமையாக குறைந்திருக்கிறது . மேலும் , அதிகபட்சமாக லடாக்கில் மைனஸ் 12.9 டிகிரி அளவு குளிர் பதிவாகியிருக்கிறது.
இந்தக் கடும் குளிரால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து சிக்கல்களும் அதிகரித்திருக்கிறது.