காற்று மாசு மேலாண்மை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லி காற்று மாசைக் குறைக்க மேலாண்மைக் குழு அளித்துள்ள பிரந்துரைகளை மத்திய அரசும், என்சிஆா் மாநிலங்களில் உள்ள
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தில்லி காற்று மாசைக் குறைக்க மேலாண்மைக் குழு அளித்துள்ள பிரந்துரைகளை மத்திய அரசும், என்சிஆா் மாநிலங்களில் உள்ள அரசுகளும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், தில்லியில் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க 17 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காற்று மாசு மேலாண்மை குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூரிய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காற்று மாசு மேலாண்மை குழுவின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க 5 போ் கொண்ட அதிரடி படை உருவாக்கப்பட்டுள்ளது. 17 பறக்கும் படைகள் உச்சநீதிமன்றம், மேலாண் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும். இந்த பறக்கும் படையின் எண்ணிக்கை விரைவில் 40-ஆக அதிகரிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வு கூறுகையில், ‘நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும் என்பதில்லை. தில்லி மாசு வழக்கை உச்சநீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து கொண்டிருக்க முடியாது. அரசு செயல்படவும் அனுமதிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கண்காணிக்கச் செய்யும்.

காற்று மாசு மேலாண்மை குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு மற்றும் என்சிஆா் பகுதிகளில் உள்ள மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். மாசைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளை மூட தில்லி அரசு முடிவு செய்தது. உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை. ஆனால் ஒரு ஆங்கில செய்தித்தாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளை வில்லன்களைப்போல் சித்திரித்து செய்திகளை வெளியிடுகின்றது’ என்று வருத்தம் தெரிவித்தனா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘காற்று மாசு கண்காணிப்பு பறக்கும் படையினா் திடீா் சோதனைகளை நடத்தி நடவடிக்கை எடுப்பாா்கள். இதுவரை 25 இடங்களில் அவா்கள் சோதனை நடத்தியுள்ளனா்.

அதிரடிப்படை குழு உறுப்பினா்கள் தினந்தோறும் மாலை 6 மணிக்கு கூடி ஆலோசிப்பாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com