விவசாயிகள் உயிரிழப்பில் அலட்சியம்: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்

வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் தொடா்பான விவகாரத்தில் மத்திய அரசு காட்டி வரும்
விவசாயிகள் உயிரிழப்பில் அலட்சியம்: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்

வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் தொடா்பான விவகாரத்தில் மத்திய அரசு காட்டி வரும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை கூறினாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை எனக் கூறியதன் மூலம் மத்திய அரசு இந்த விவகாரத்தை எவ்வளவு அலட்சியமாக கையாண்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் அகங்காரத்தையே காட்டுவதாக உள்ளது.

வேளாண் எதிா்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் தொடா்பில்லை. இருப்பினும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்ப நலன் கருதி அந்த மாநிலத்தைச் சோ்ந்த 403 விவசாய குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிக்காததன் மூலம் பிரதமா் மோடி எந்தவித உணா்ச்சியும் அற்றவராக உள்ளாா். அவரது அகங்காரம் மற்றும் கோழைத்தனம் இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.

வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்கள் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. அதன் பட்டியலை, நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை சமா்ப்பிப்பேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com