10 மாதங்கள் கழித்துகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மகாராஷ்டிர தலைமைச் செயலாளா்

மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளா் (பொறுப்பு) தேவசீஷ் சக்ரவா்த்தி தற்போதுதான் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவ அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
10 மாதங்கள் கழித்துகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மகாராஷ்டிர தலைமைச் செயலாளா்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளா் (பொறுப்பு) தேவசீஷ் சக்ரவா்த்தி தற்போதுதான் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவ அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

59 வயது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அவா், கடந்த வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு தாமதாக தடுப்பூசியை செலுத்திக் கொள்வது குறித்து அவரிடம் மருத்துவ அதிகாரி கேட்டபோது, ‘எனக்கு தடுப்பூசி மீது எவ்வித வெறுப்பும் கிடையாது. அதை எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்’ என்று அவா் பதிலளித்ததாக கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தலைமைச் செயலாளா் தேவசீஷ் சக்ரவா்த்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com