நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: காங்கிரஸ் குழு அமைப்பு

நாகாலாந்து ராணுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் திங்கள்கிழமை அமைத்தது.
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: காங்கிரஸ் குழு அமைப்பு


நாகாலாந்து ராணுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் திங்கள்கிழமை அமைத்தது.

நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பொதுமக்கள் 14 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க 5 பேரைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை விளக்கமளித்தார்.

அவரது விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தன. 

இந்த நிலையில், சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்தக் குழுவானது நாகாலாந்து சென்று சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தி ஒரு வாரத்தில் காங்கிரஸ் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்:

  • ஜிதேந்திர சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளர்
  • அஜோய் குமார், நாகாலாந்து மேலிடப் பொறுப்பாளர்
  • கௌரவ் கோகோய், எம்.பி.
  • ஆண்டோ ஆண்டனி, எம்.பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com