நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன தெரியுமா?
நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன தெரியுமா?

நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன தெரியுமா?

நம் நாட்டில் ஒட்டுமொத்தமாக எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன என்ற தகவலை, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.


புது தில்லி: நம் நாட்டில் ஒட்டுமொத்தமாக எத்தனை ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்கள் இருக்கின்றன என்ற தகவலை, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கரத், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 2.13 லட்சம் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 47 சதவீதத்துக்கும் அதிகமானவை, கிராம மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், கூடுதலாக எந்த வங்கியையும் சாராமல், வெறும் ஏடிஎம் இயந்திரங்களும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 27,837 ஏடிஎம் இயந்திரங்கள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com