கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்

கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்தாா்.

கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்:

கரோனா தொற்று பரவலால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்குச் சுமாா் ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அந்த நிதியாண்டில் இந்திய விமான நிலையங்களுக்கு ரூ.5,116 கோடி இழப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தாா்.

நிலக்கரி தட்டுப்பாடில்லை: நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடில்லை என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பதில்:

கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி நிலவரப்படி, மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 72 லட்சம் டன்னாகக் குறைந்தது. நிலக்கரி இறக்குமதி செய்யும் மின்சார நிலையங்களில் மின்னுற்பத்தி குறைந்தது, மின்தேவை அதிகரிப்பு, பலத்த மழை, உலா் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சில இடையூறுகள் காரணமாக நிலக்கரி கையிருப்பு குறைந்தது.

இந்நிலையில் நிலக்கரி விநியோக அதிகரிப்பால் நிலக்கரி கையிருப்பு தற்போது அதிகரித்துள்ளது. கடந்த நவ.29-ஆம் தேதி வரை நிலக்கரி கையிருப்பு 17.29 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடில்லை.

மத்திய மின்சார ஆணையப் புள்ளிவிவரங்களின்படி, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபா் மாதம் வரை நிலக்கரி மூலம் 594.34 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 511.46 பில்லியன் யூனிட்டாக இருந்தது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com