முன்பெல்லாம் விடைத்தாள்தான் பக்கம் பக்கமாக இருக்கும்: கவலையில் சிபிஎஸ்இ மாணவர்கள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் எம்சிக்யூ எனப்படும் சரியான விடையைத் தேர்வு செய்து குறிக்கும் முறை நடைமுறைப்படுத்தப
முன்பெல்லாம் விடைத்தாள்தான் பக்கம் பக்கமாக இருக்கும்: கவலையில் சிபிஎஸ்இ மாணவர்கள்
முன்பெல்லாம் விடைத்தாள்தான் பக்கம் பக்கமாக இருக்கும்: கவலையில் சிபிஎஸ்இ மாணவர்கள்


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் எம்சிக்யூ எனப்படும் சரியான விடையைத் தேர்வு செய்து குறிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெறும் முதல் பருவத் தேர்வு சரியான விடையைத் தேர்வு செய்து குறிக்கும் முறையில் 50 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 

இதன் மூலம், முதல் பருவத் தேர்வுகளில் மாணவர்கள், கேள்விகளுக்கு பக்கம் பக்கமாக விடைகளை எழுதத் தேவையில்லை. சரியான விடையைக் கண்டறிந்து, அதற்கான விடைத்தாள் பக்கத்தில், குறித்தால் போதுமானது. சரியான விடைகளை எழுதிப் பார்க்க, கூடுதலாக சில தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்து ஏப்ரல் மாதத்தில் 50 மதிப்பெண்களுக்கு விடைகளை எழுதும் முறையில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும். இதில்தான் மாணவர்கள் கேள்விகளுக்கு விடைகளை பக்கம் பக்கமாக எழுத வேண்டியது வரும்.

இந்த நிலையில், முதல் பருவத் தேர்வெழுதி வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வினாத்தாள்கள் பக்கம் பக்கமாக இருப்பதும், சில கேள்விகளே மிகப்பெரியதாக இருப்பதும், கரோனா பேரிடர் காரணமாக நீக்கப்பட்ட பாடங்களிலிருந்து சில கேள்விகள் இருப்பதும், மாணவர்களையும், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த பனிரெண்டாம் வகுப்புக்கான ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வுகளும், சற்று கடினமாக இருந்ததோடு, பி மற்றும் சிப் பிரிவு கேள்விகள் மிகப்பெரியதாக அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான கேள்விகள் பாடப்புத்தகத்திலிருந்து கேட்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறுகிறார்கள். இதனால், மாணவர்களின் மதிப்பெண் சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஆசிரியர்களும், பெற்றோரும் கவலை  அடைந்துள்ளனர்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தயாராகிவரும் மாணவர்களுக்கு, பருவத் தேர்வுகள் கடினமாக இருந்ததால், உற்சாகம் குறைந்து காணப்படுகின்றனர். 

அதிலும், சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை சிறந்ததாகவே இருந்தாலும், இந்த புதிய முறையில் ஒரு சில தேர்வுகளை எழுதி பயிற்சி எடுக்கப் போதுமான நேரம் கிடைக்காததால், சரியான விடைகளைத் தேர்வு செய்து, குறிப்பது மற்றும், எழுதாமல் விடும் தேர்வுகளைத் தனியாக குறிப்பது போன்றவற்றில், மாணவர்கள் சரியாக ஈடுபட முடியாமல் திணறுவதாகவும் ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேம்சந்திரன் கூறுகையில், அதிக பக்கங்களைக் கொண்ட வினாத்தாள்களும், மிக நீண்ட வினாக்களும், மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அவர்களது எதிர்கால நலன் கருதி, விடைத்தாளை சற்று தளர்வாக திருத்தும்படி கேட்டுக் கொள்வதாக வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com