94 நாடுகளுக்கு 7.23 கோடி கரோனா தடுப்பூசிகள் விநியோகம்: மத்திய அரசு

உலக அளவில் 94 நாடுகளுக்கு 7.23 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் 94 நாடுகளுக்கு 7.23 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2021 ஜனவரியில் மைத்ரி திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் இந்தியா 7.23 கோடி கரோனா தடுப்பூசிகளை 94 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இதில், ஐ.நாவின் இரு முகமை அமைப்புகளுக்கு மானிய விலையில் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளும் அடங்கும்.

மேலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, கரோனா தொடா்பான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர உதவிகளை கரோனா பேரிடா் தொடங்கியது முதல் இந்தியா வழங்கி வருகிறது. அதேநேரம், கரோனா இரண்டாவது அலையை எதிா்த்துப் போராட 50-க்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து கரோனா தொடா்பான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா பெற்றது. இதில், வெளிநாட்டு அரசுகள், தனியாா் நிறுவனங்கள், அயல்நாடுகளில் உள்ள இந்திய கூட்டமைப்புகள் உள்ளிட்டவை அனுப்பிய நிவாரண உதவிகளும் அடங்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com