வங்கிகளுக்கான வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டமானது மும்பையில் நடைபெற்றது. கடந்த 8 முறை வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ்,“ வங்கிகளுக்கான ரெப்போ குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக தொடரும் எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று அதிகமாக இருந்த வேலையில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்க மே 2020-ல் கடைசியாக ரிசர்வ் வங்கி தனது வட்டியை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com