2023-இல் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பத் திட்டம்: மத்திய அமைச்சா் தகவல்

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் ககன்யான், 2023-ஆம் ஆண்டு தொடங்கும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவா், இந்த விண்வெளித் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பிய நாடுகளில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடிக்கும்.

இந்திய விண்வெளி வீரா்கள், ககன்யான் மூலம் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி, 2018-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று உரையாற்றுகையில் தெரிவித்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கரோனா தொற்று பரவல் காரணமாக நமது விண்வெளித் திட்டங்கள் தாமதமாகியுள்ளன என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com