கூண்டோடு ராஜிநாமா செய்த நிர்வாகிகள்; தொடர் பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கோவா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அம்மாநில நிர்வாகிகள் இன்று கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜிநாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஒரு மித்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் அக்கட்சியில் பெரும் குழப்பம் நீடித்துவருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்திற்கு செல்ல காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்தார். இதற்கு மத்தியில், போர்வோரிம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனர். 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என ராஜிநாமா செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் குபேஷ் நாயக் கூறுகையில், "வரும் கோவா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை. வெற்று பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதன் சில தலைவர்களின் அணுகுமுறையிலிருந்து இது தெரியவருகிறது" என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com