சிலிண்டர் விலையைக் குறைக்கச் சொன்னால்.. எடையைக் குறைக்கிறார்களா?
சிலிண்டர் விலையைக் குறைக்கச் சொன்னால்.. எடையைக் குறைக்கிறார்களா?

சிலிண்டர் விலையைக் குறைக்கச் சொன்னால்.. எடையைக் குறைக்கிறார்களா?

எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


புது தில்லி: எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, எரிவாயு உருளையின் எடை அதிகமாக இருப்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவுதால், அதன் எடையைக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வரவதாகத்தகவல்கள் தெரிவிக்கின்ற.

அதாவது, பெண்கள் எரிவாயு உருளையை சுமந்துச் செல்வதில் பிரச்னை இருப்பதால், அதன் எடை குறைக்கப்படும். அவ்வாறு செய்யப்பட்டால் பெண்கள், ஏழை, எளிய மக்கள் எளிதாக சிலிண்டரை எடுத்துச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளையை, அதன் எடை காரணமாக, கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் எழுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே, அதன் எடையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க.. ஹெலிகாப்டர் விழும்முன் விடியோ எடுத்தது எப்படி? சுற்றுலாப் பயணி விளக்கம்

அதிக எடை காரணமாக, சிலிண்டர்களை சுமந்து செல்வதில் பெண்களுக்கு சிரமம் ஏற்படுவதாகக் கூறிப்பிட்டார். மேலும், பெண்கள் மற்றும் மகள்கள் அதிக எடை கொண்ட சிலிண்டர்களை தூக்கிச் செல்வதில் சிரமம் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சிலிண்டர் எடையை நடுத்தரமாக ஒரு எடையில் நிர்ணயிக்க அதாவது 14.2 மற்றம் 5 கிலோவுக்கு இடையே நிர்ணயிக்கவும், எடையை வேறு வழிகளில் குறைக்கவும் வழிவகைக் காணப்படும். இது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.

தக்காளி விலை உயர்ந்தால், அரை தக்காளி போட்டு சமைத்துக் கொள்வார்கள், எண்ணெய் விலை உயர்ந்தால், இரண்டு சொட்டு விட்டு தாளித்துக் கொள்வார்கள். ஆனால். முக்கியமான எரிவாயு உருளை விலையே விண்ணைத் தொட்டால்?

எரிவாயு உருளை விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலையில், அதனைக் குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், எரிவாயு உருளையின் எடையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com