உறுதிப்படுத்தப்படாத யூகங்களை தவிர்க்கவும்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து இந்திய விமானப்படை

ஹெலிகாப்டர் விபத்து குறித்த உறுதிப்படுத்தப்படாத யூகங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படை
இந்திய விமானப்படை

தமிழ்நாடு குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து காரணமாக முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விபத்து குறித்து பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக, விபத்து நடைபெறுவதற்கு முன்பு மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்குவதற்கு பைலட்டுகள் மறுத்ததாகவும் ஆனால், உயர் அலுவலர்களின் அழுத்தத்தின் காரணமாகவே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத யூகங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஹெலிகாப்டர் விபத்தின் காரணம் குறித்து அறிய முப்படை நீதிமன்ற விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும். அதுவரை, உயிரிழந்தவர்களை களங்கப்படுத்தும் வகையில், உறுதிப்படுத்தப்படாத யூகங்களை தவிர்க்கவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com