மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் 

மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் 

மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மி தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. வழக்கமான கரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது ஒமைக்ரான் தீநுண்மி. இந்தியாவில் முதன்முறையாக உருமாறிய ‘ஒமைக்ரான்’ - கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட இருவா் கா்நாடகத்தில் கண்டறியப்பட்டனா். 

இதையடுத்து, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி மும்பையில் 3 பேருக்கும், பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சியில் 4 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் ஏற்கெனவே 25 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com