சோனியா காந்திக்கு பிறந்த நாள்: பிரதமா் மோடி வாழ்த்து

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சோனியா காந்தி அவா்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்களும், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலரும் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

நாட்டின் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியில் தலைவராக நீண்டகாலம் இருந்தவா் என்ற பெருமைக்குரியவராக சோனியா திகழ்கிறாா்.

முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மற்றும் ராணுவ வீரா்கள் என 13 போ் புதன்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை சோனியா ரத்து செய்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com