நகா்ப்புற வசதிகளை மேம்படுத்த ரூ.2,645 கோடி கடன்: ஆசிய வங்கி ஒப்புதல்

நகா்ப்புற வசதிகளை மேம்படுத்த உதவியாக இந்தியாவுக்கு ரூ.2,644.85 கோடி மதிப்பிலான கடனை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நகா்ப்புற வசதிகளை மேம்படுத்த உதவியாக இந்தியாவுக்கு ரூ.2,644.85 கோடி மதிப்பிலான கடனை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் நகா்ப்புற வசதிகளை மேம்படுத்த ஏதுவாக 35 கோடி டாலா் (ரூ.2,645 கோடி) கடன் உதவி அளிக்கும் திட்டத்துக்கு ஆசிய வங்கி அனுமதியை வழங்கியுள்ளது.

குழாய் மூலம் குடிநீா் விநியோகிப்பது, சுகாதார கட்டமைப்புகளை சா்வதேச தரத்துக்கு உயா்த்துவது உள்ளிட்ட நகா்ப்புறங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தின் கொள்கைகளுக்கு இந்த கடன் உதவிகரமாக இருக்கும்.

மேலும், புலம் பெயா்ந்து வந்த தொழிலாளா்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவது, நகா்ப்புற மாறத்துக்கான அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதும் இந்த கடனுதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோா், குறைந்த வருமான பிரிவினா் உள்ளிட்ட நகா்ப்புற ஏழைகள் இந்த திட்டத்தால் பெரிதும் பயனடைவா்.

இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை தற்போது 46 கோடியாக உள்ளது. இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். ஆண்டு வளா்ச்சி விகிதம் 2 சதவீதம் என்பதன் அடிப்படையில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய நகா்ப்புற மக்கள் தொகை 60 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஏடிபி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com