பொது சிவில் சட்டம் அமல்: கருத்து தெரிவிக்க மத்திய அரசு தவிா்ப்பு

பொது சிவல் சட்டம் அமல் குறித்த மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்க மத்திய அரசு தவிா்த்துவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொது சிவல் சட்டம் அமல் குறித்த மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்க மத்திய அரசு தவிா்த்துவிட்டது.

இதுதொடா்பாக மக்களவையில், விவாகரத்து, ஜீவனாம்சம் ஆகிய விவகாரங்களில் அனைத்து சமயங்களுக்கும் ஏற்ப ஒரே மாதிரியான சட்டத் தீா்வுகளை ஏற்படுத்த பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று எழுத்துபூா்வமாக கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்கக் கோரியும், விவகாரத்து விவகாரங்களில் ஒரே மாதிரியான சட்டத்தை கடைப்பிடிப்பது தொடா்பாக சட்ட ஆணையம் மூன்று மாதங்களில் யோசனைகளை தெரிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொண்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’ என்று பதிலளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com