மேலும் 6 மருந்தியல் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அந்தஸ்து: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

நாட்டில் மேலும் 6 மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தேசிய அந்தஸ்து அளிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் மேலும் 6 மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தேசிய அந்தஸ்து அளிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் கடந்த 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பதிலளித்துப் பேசியதாவது:

தேசிய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனச் சட்டம் கடந்த 1988-இல் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் தேசிய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டு அதற்கு தேசிய அந்தஸ்து வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஆமதாபாத், குவாஹாட்டி, ஹாஜிபூா், ஹைதராபாத், கொல்கத்தா, ரேபரேலி ஆகிய நகரங்களில் மேலும் 6 தேசிய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு தேசிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதா என்று தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது. அவற்றுக்கு தேசிய அந்தஸ்து வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனச் சட்ட திருத்த மசோதா-2021 கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும், 3 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, இந்த கல்வி நிறுவனங்களில் புதிதாக இளநிலை, டிப்ளோமா படிப்புகள் தொடங்கப்படும். ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழுக்களில் உள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கை 23-இல் இருந்து 12-ஆகக் குறைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com