நாட்டில் புதிதாக 3 பேருக்கு ஒமைக்ரான்: மொத்த பாதிப்பு 36 ஆக உயர்வு

​இந்தியாவில் மேலும் 3 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவில் மேலும் 3 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் முதன்முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் மூன்றாவதாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி கர்நாடக சுகாதாரத் துறை சுதாகர் கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவிலிருந்துத் திரும்பிய 34 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த 20 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

சண்டிகர்:

சண்டிகரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறித்து சண்டிகர் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை:

"இத்தாலியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் சண்டிகரிலுள்ள உறவினர்களைச் சந்திக்க நவம்பர் 22-ம் தேதி இந்தியா வந்தார். அவர் வீட்டுத் தனிமையில் இருந்தார். டிசம்பர் 1-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கரோனா மறுபரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக தில்லிக்கு அனுப்பப்பட்டது.

அவருடன் தொடர்பிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இத்தாலியைச் சேர்ந்தவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இத்தாலியில் ஃபைசர் தடுப்பூசி முழுமையாகச் செலுத்திக்கொண்டுள்ளார். இவர் 11 நாள்கள் தனிமையில் வைக்கப்பட்டார். அவரது பரிசோதனை முடிவு டிசம்பர் 11-ம் தேதி இரவு வெளியானது. அதில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை." 

இதன்மூலம், நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com