வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி: விவசாய சங்கங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை பயிற்சியாக எடுத்துக்கொள்வதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார். 
வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி: விவசாய சங்கங்கள்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை பயிற்சியாக எடுத்துக்கொள்வதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார். 

எல்லா காலநிலைகளிலும் திறந்தவெளியில் நடத்திய போராட்டம் மனவலிமையுடன், உடல் ரீதியான பலத்தையும் கொடுத்துள்ளதாகவும் கூறினார். 

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றியது.

இதனை எதிர்த்து அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெற்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்கிவராத மத்திய அரசு கடந்த நவ.19-ஆம் தேதி வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனையடுத்து விவசாயிகள் தில்லி எல்லைகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத், விவசாயிகளின் போராட்டம் ஓராண்டுக்கும் மேல் நடைபெற்றது. எல்லா காலநிலைகளிலும் நடைபெற்றுவந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அது விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சியாக இருந்தது. அதனால் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகாலத்திற்கு எங்களால் தற்போது வேலைசெய்ய இயலும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com