சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்

10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்

10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை(டிச.11) ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அதில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றதால் சர்ச்சையானது. 

இவ்விவகாரத்தை மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று எழுப்பினார். மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com