தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்: தில்லி முதல்வர் எச்சரிக்கை

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை எச்சரித்துள்ளார்.
தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்: தில்லி முதல்வர் எச்சரிக்கை

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை எச்சரித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், புதிய வகை கரோனாவை எதிர்கொள்ள தில்லி அரசு தயாராகியுள்ளது. 

பொதுமுடக்கம் விதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால், கட்டாயம் பிறப்பிக்கப்படும். ஆனால் தற்போது வரை தில்லியில் அதுபோன்ற சூழல் ஏற்படவில்லை. தில்லி முழுவதுமே இதுவரை இருவர் மட்டுமே ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து குளிர்கால விடுமுறைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

தில்லியில் சனிக்கிழமை மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14,41,662-ஆக உயா்ந்துள்ளது. அதில், 14.16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். 

தில்லியில் இந்த மாதம் மட்டும் இதுவரை 2 கரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. நவம்பரில் 7, அக்டோபரில் 4, செப்டம்பரில் 5 இறப்புகள் பதிவாகின. அதன்படி, தில்லியின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 25,100-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com