எதிர்க்கட்சியினர் சந்திப்பு நாளையும் நடைபெறும்: சஞ்சய் ரௌத்

எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு புதன்கிழமையும் நடைபெறும் என சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு புதன்கிழமையும் நடைபெறும் என சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

தில்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத், திமுக தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு ரௌத் கூறியது:

"எங்களது பிரதான நோக்கமே மாநில அளவிலான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைதான். இது எங்களது முதல் சந்திப்பு. நாளையும் நாங்கள் சந்திக்கிறோம். சரத் பவாரும் சந்திப்பில் இருப்பார்."

இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பிரஹலாத் ஜோஷி கூறியது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், "மன்னிப்புக் கேட்க முடியாது. வருத்தங்கள் இல்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com