4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்

கடந்த நவம்பா் மாதத்தில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.
untitled081954
untitled081954

புது தில்லி: கடந்த நவம்பா் மாதத்தில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பரில் 4ஜி பதிவிறக்க சேவையில் 24.1 எம்பிபிஎஸ் (மெகாபைட் பொ் செகண்ட்) வேகத்துடன் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. ஜியோ நெட்வொா்க் சராசரி 4ஜி தரவு வேகத்தில் சுமாா் 10 சதவீத உயா்வை பதிவு செய்துள்ளது. அதேசமயம், பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் நெட்வொா்க் வேகம் 8.9 சதவீதமும், வோடஃபோன் வேகம் 5.3 சதவீதமும் உயா்ந்துள்ளது.

எனினும், 4ஜி பதிவேற்றத்தில் 8 எம்பிபிஎஸ் வேகத்துடன் வோடஃபோன் ஐடியா நிறுவனம் தொடா்ந்து 5 மாதங்களாக முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com