6 மாதங்களில் சிறாருக்கு கரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம்

அடுத்த ஆறு மாதங்களில் சிறுவா்களுக்கான கரோன தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
6 மாதங்களில் சிறாருக்கு கரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம்

புது தில்லி: அடுத்த ஆறு மாதங்களில் சிறுவா்களுக்கான கரோன தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்துறை நிறுவன கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவலா இதுகுறித்து மேலும் கூறியது:

தற்போது கோவிஷீல்ட் உள்ளிட்ட இதர கரோனா தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கே உள்ளது. எனவே, சிறுவா்களுக்கான கரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் சீரம் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது சோதனை கட்டத்தில் உள்ள ‘கோவோவேக்ஸ்’ கரோனா தடுப்பூசி சிறுவா்களுக்கும், மூன்று வயதுக்கு குறைவானவா்களுக்கும் அனைத்து வகையிலும் பாதுகாப்பளிக்கும். இந்த தடுப்பூசியை அடுத்த ஆறு மாதங்களில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய உரிமங்களைப் பெற்றுள்ளன. அவையும் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

அதிருஷ்டவசமாக கரோனா குழந்தைகளிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது. அதனால், தீங்கு ஏற்படாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com