5 ஆண்டுகளாக கேஜரிவால் எங்கே இருந்தார்? ஹர்சிம்ரத் கெளர் விமர்சனம்

கடந்த 5 ஆண்டுகளாக கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ.க்கள் யாரையும் பார்க்க முடியவில்லை என சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர்  ஹர்சிம்ரத் கெளர் பாதல் புதன்கிழமை விமர்சித்துள்ளார்.
சிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கெளர் பாதல்  (கோப்புப்படம்)

பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

குறிப்பாக பஞ்சாப் பேரவைத் தேர்தலுக்கு பலமுனைப் போட்டிகள் நிலவி வரும் சூழலில் தற்போதைய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹர்சிம்ரத் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எங்கு தேர்தல் நடந்தாலும் கேஜரிவால் வந்துவிடுகிறார். கடந்த 2017 தேர்தலின்போதும் இப்படிதான் பொய் வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால், எதிர்க்கட்சியான பிறகும் கடந்த 5 ஆண்டுகளில் அவரை பஞ்சாபில் பார்க்க முடியவில்லை. அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் பார்க்கவில்லை என விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com