Enable Javscript for better performance
Madhya Pradesh CM announces compensation of Rs 1 cr to kin of Group Captain Varun Singh- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    முழு அரசு, ராணுவ மரியாதையுடன் வருண்சிங்கின் இறுதிச் சடங்கு; ரூ. 1 கோடி இழப்பீடு- ம.பி. முதல்வர்

    By DIN  |   Published On : 16th December 2021 04:14 PM  |   Last Updated : 16th December 2021 04:45 PM  |  அ+அ அ-  |  

    PTI12_16_2021_000110A

    பெங்களூரு எலகங்கா விமானப் படை மைதானத்தில் கேப்டன் வருண் சிங்கின் உடலை சுமந்துசெல்லும் விமானப்படையினர். 

    குன்னூர் விபத்தில் உயிரிழந்த கேப்டன் வருண்சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு, ராணுவ மரியாதையுடன் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். 

    நீலகிரி குன்னூரில் கடந்த டிச.8 ஆம் தேதி நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 போ் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 85 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு விமானப் படையின் கமாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிறப்பு மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் டிச. 15 அன்று அவா் உயிரிழந்தாா்.

    இதையடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு எலகங்கா விமானப் படை மைதானத்தில் கேப்டன் வருண் சிங்கிற்கு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் பெங்களூருவில் இருந்து போபால் கொண்டு செல்லப்பட்டது. போபால் விமான நிலையத்தில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அமைச்சர்கள், அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

    இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய  மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் , 'குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு எனது அஞ்சலி. போபாலில் அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் நடைபெறும். அவரது தந்தையும் மிகவும் துணிச்சலானவர். ஒட்டுமொத்த குடும்பமும் தேசத்திற்காக அர்ப்பணித்துள்ளது. இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம்.

    அவரது குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும். ஒரு கல்வி நிறுவனத்திற்கு அவரது பெயரை சூட்டுவது குறித்தும் அவரது நினைவாக சிலை அமைப்பது குறித்தும் அவரது குடும்பத்தினருடன் ஆலோசிக்கப்படும்' என்று கூறியுள்ளார். 

    வருண் சிங்கின் இறுதிச் சடங்கு போபாலில் நாளை(டிச.17) நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிக்க | ஹெலிகாப்டா் விபத்தில் காயமடைந்த கேப்டன் வருண் சிங் காலமானாா்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp