தெருவோர நாய்களுக்கு உணவளித்த பெண்ணுக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம்

குடியிருப்பு பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர், மக்களை பின்தொடர்ந்து சென்று நாய்களுக்கு உணவளிப்பவர்களின் பெயரை குறித்து வைத்து கொள்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரா நேவி மும்பையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்துவரும் பெண்ணுக்கு, தெருவோர நாய்களுக்கு உணவளித்ததற்காக 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகத்திற்குள் தெருவோர நாய்களுக்கு உணவளித்த காரணத்தினால் குடியிருப்பு சங்கத்தின் நிர்வாகக் குழு அபாரதம் விதித்துள்ளதாக அப்பெண் குற்றண்சாட்டியுள்ளார்.

என்ஆர்ஐ என்ற அந்த குறிப்பிட்ட வளாகத்தில் கிட்டத்தட்ட 40 கட்டிடங்கள் அமைந்துள்ளன. தனக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறித்து விரிவாக பேசிய அன்ஷு சிங், "வளாகத்திற்குள் தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. குப்பைகளை கொட்டுவதற்காகக் கூறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை எனது ஒட்டுமொத்த அபராதத் தொகை 8 லட்சத்தை தாண்டியுள்ளது.

குடியிருப்பு வளாகத்திற்குள் தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது அபாரதம் வதிக்க வேண்டும் என்ற முடிவை குடியிருப்போர் சங்கத்தின் நிர்வாக குழு எடுத்தது. இந்த நடைமுறை கடந்த 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் அமலில் உள்ளது. குடியிருப்பு வளாகத்திற்குள் பல தெருநாய்கள் சுற்றி திரிகின்றன" என்றார்.

இதுகுறித்து குடியிருப்பு வளாகத்தில் வசித்துவரும் லீலா வர்மா என்பவர் கூறுகையில், "குடியிருப்பு பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர், மக்களை பின்தொடர்ந்து சென்று நாய்களுக்கு உணவளிப்பவர்களின் பெயரை குறித்து வைத்து கொள்கிறார். பின்னர், நிர்வாகக் குழுவுக்கு இது தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அபராத தொகையை கணக்கிடுகின்றனர்" என்றார்.

இதுகுறித்து குடியிருப்பு வளாகத்தின் செயலாலர் வினிதா ஸ்ரீநந்தன் கூறுகையில், "மாலை நேர பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகள் நாய்களை துரத்திச் செல்கின்றனர். அச்சம் காரணமாக முதியவர்கள் சுதந்திரமாக நடக்க முடிவதில்லை.

வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பிற பகுதிகளில் நாய்கள் கழிப்பது தொல்லையை தருகிறது. இதனால் தூய்மை மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இரவு முழுவதும் நாய்கள் குரைப்பதால் பொதுமக்கள் சரியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர். நாய்கள் வராமல் இருப்பதற்கு அடைப்பு உருவாக்கப்பட்டது. இருப்பினும், சிலர் நாய்களுக்கு திறந்தவெளியில் உணவளித்துவருகின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com